ஓஷோ என்ற தத்துவ ஞானியின் அறிவுலகக் கோட்பாடுகளை எடுத்துரைக்கும் நுால். காதலையோ, காமத்தையோ அடக்கினால் வக்கிரமாக மாறும் என்கிறது.
காதல் என்பது காமத்தில் தான் துவங்குகிறது என்று இயற்கையை வெளிப்படையாக உரைக்கிறது. காதலுக்குப் பிறகு தான் காமம் என்பதை துடைத்தெறிந்து உணர்த்துகிறது.
உயர்ந்த தத்துவச் சிந்தனைகளையும் எளிமையாக எடுத்துச் சொல்கிறது. அவற்றை விளக்க எடுத்துக் கூறிய சிறிய கதைகள், கிளிப்பேச்சு என்ற அத்தியாயத்தில் தெளிவாக உரைக்கப்பட்டுள்ளது.
கதைகள் வழியாக வாழ்வு உண்மைகளை எடுத்துச் சொன்னதால் உலகம் போற்றியது. அவரை ஒழிக்க திட்டமிட்டதையும் எடுத்துரைக்கிறது. இந்திய தத்துவ அறிஞரை அறிந்து கொள்ள உதவும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்