நீதிபதி மு.மு.இஸ்மாயில், மணவை முஸ்தபா உள்ளிட்ட 31 இஸ்லாமிய அறிஞர்கள் வாழ்க்கையை எளிய நடையில் தரும் நுால்.
இஸ்லாமிய இதழியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றது தாருல் இஸ்லாம். இதை நடத்திய தாவூத்ஷா இந்திய விடுதலைக்காக செய்த தியாகத்தை எடுத்துரைக்கிறது. ஆங்கிலேயர் நியமித்த சைமன் குழுவை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர் உபயதுல்லா சாகிப். பாகிஸ்தான் பிரிக்கப்படக்கூடாது என்று கூறியதில் குறிப்பிடத்தக்கவர்.
முஸ்லிம் அறிஞர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், நீதிபதி, தமிழ்ப் பணியாளர் என பன்முகம் கொண்ட இஸ்லாமிய தலைவர்களையும், அறிஞர்களையும் அறிமுகம் செய்யும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்