அமைதியான வாழ்க்கைக்கு சிந்தனையை தரும் நுால். மாற்றம் ஏற்பட, மனோபாவம் மாற வேண்டும் என்கிறது.
சிறிய விஷயங்களுக்கு கவலைப்படக் கூடாது; எதிலும் பூரணத்துவம் சாத்தியமில்லை. மன அமைதிக்கு முதலிடம் கொடுத்தால், சாதனைகள் தானாக வரும். எதிர்மறை எண்ணங்கள் குழப்பத்திற்கு இட்டுச் செல்லும். இப்போதைய நேரம் தான் கட்டுப்பாட்டில் இருக்கும்.
பயத்தைத் தவிர்க்க, நிகழ்காலத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்; பொறுமையாக இருப்பது பெரிய கவசம்; வீம்பை கைவிட்டால் பிரச்னை எளிதில் தீரும்; எதுவும் நிரந்தரமல்ல என்று எண்ண வேண்டும். இது போன்ற அறிவுரைகளை தரும் நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து