நலமுடன் வாழ்வதற்கு வழிகாட்டும் நுால். உடல், உள்ளத்தை பேணுவதற்கு உரிய சிந்தனைகள், 56 கட்டுரைகளில் தொகுத்து தரப்பட்டுள்ளன.
உடல் மற்றும் மனதை கவனித்து பேண வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து சுறுசுறுப்பாக இயங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிவுறுத்துகிறது.
தொடர்ந்து, மனதை அமைதியாக வைத்திருக்கும் வழிமுறைகள், அழுத்தத்தை குறைக்கும் அறிவுரைகள், துாக்கமின்மையை தவிர்க்கும் நடைமுறை, உணவை மருந்தாக உட்கொள்ளுதல் என பல்வேறு பொருட்களில் சிந்தனைக்கு விருந்து படைத்துள்ளது. உடலை பேண உணவின் முக்கியத்துவம், உடற்பயிற்சியால் கிடைக்கும் நன்மைகளை நயம்பட உரைக்கிறது. நலமுடன் வாழ வழிகாட்டும் நுால்.
– மதி