சங்ககால மக்களின் வாழ்வு கூறுகளை நுட்பமாக ஆய்வு செய்து படைக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
தொல்காப்பியம் முதல் தமிழ் செவ்விலக்கியப் பாடல்களில் காணக் கிடைக்கும் பெண்கள் பற்றிய குறிப்புகளை ஆய்ந்து, தகவல்களை அள்ளித் தருகிறது. ஐந்திணை வாழ் குடிமக்களில் பெண்களின் மாண்பு, இல்லறத்தில் பெண்கள் நிலைப்பாடுகள், புகுந்தகத்தில் பெண்ணின் பெருமை, பெண்டிர் வீர உணர்வுகள், நாட்டுப்பற்று, கடமைகள் போன்றவற்றை முன்வைக்கின்றன.
சங்க காலத்தில் பெண்கள் கொண்டிருந்த இயல்பான கல்வியறிவையும் தெரியச் செய்கிறது. இல்லற மேம்பாட்டுக்காக பெண்கள் மேற்கொண்ட திணை சார்ந்த தொழில்கள் விளக்கப்பட்டுள்ளன. வரலாற்றுக் கருவூல நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு