ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் தமிழர் வாழ்வியல் பொருந்தி வருவதை ஆய்வு செய்து வெளிப்படுத்தும் நுால்.
சச்சந்தன் என்ற மன்னன், அமைச்சனால் நாட்டை இழந்து உயிர் விடுகிறான். அவனது மகன் சீவகன், நாட்டை மீட்பது தான் சீவக சிந்தாமணியின் கதை. இதை சுருக்கமாக எடுத்துரைத்து படிக்கும் ஆர்வத்தை துாண்டுகிறது.
சீவகன் எட்டு பேரை திருமணம் செய்து அவர்கள் சார்ந்தோரை துணையாக்கி கட்டியங்காரன் என்ற வில்லனை வீழ்த்துகிறான். பகைவரை வீழ்த்துவதற்கு துணையாகப் பலரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என எடுத்துரைக்கிறது. இல்வாழ்க்கையின் நிறைவு துறவறத்தில் முடிகிறது. சீவக சிந்தாமணி கருத்துகளை அறிய உதவும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்