பிரதமர் மோடியின் சிறப்புகளை விவரிக்கும் காவிய நுால். இலக்கணம் மீறாத இலக்கியமாக படைக்கப்பட்டு உள்ளது.
எதுகை, மோனையை வலிய தேடாமல் வார்த்தைகள் வந்து விழுகின்றன. ஓசை நயமும், கருத்து நயமும் ஒன்றை ஒன்று மிஞ்சுகின்றன. இலவசம் என்ற பெயரில் மக்களை எப்பொழுதும் எதிர்பார்த்து நிற்க வைத்தால் தப்பு என்று தெளிவாகச் சொல்கிறது. பொதுத் துறை வங்கிப் பணிகளை விரைவுபடுத்தியதும் பாடப்பெற்றுள்ளது.
பெண்களுக்கு முன்னுரிமையாக முதல் முறையாக, குஜராத் அமைச்சரவையில் 11 பேரை அமைச்சர்ஆக்கியது இன்றைய வரலாறு என்கிறது. கல்வித் துறைக்கு புது வெளிச்சம் பெற, கல்விக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தியதை குறிப்பிடுகிறது. நம்பிக்கை நாயகனை போற்றும் காவியம்.
– சீத்தலைச்சாத்தன்