மனித உறவுகளின் சிக்கலை ஆராயும் நாவல் நுால்.
நாவலில் கதை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் கதாநாயகியின் வாழ்க்கையைப் பற்றிய வெவ்வேறு கண்ணோட்டத்தை வழங்குகிறது. முதல் பகுதியில் அவள் ஒரு சிறந்த வாழ்க்கை உறவில் ஈர்க்கப்படுகிறாள். இறுதியில் அவள் பாதிக்கப்படுகிறாள். அது, பெரும் சீரழிவுக்கு மேடை அமைக்கிறது.
இரண்டாம் பாகம், கதாநாயகியின் வாழ்க்கையைத் தொடர்கிறது. அவளது தேர்வுகளின் விளைவுகளையும், எதிர்கொள்ளும் கடுமையையும் காட்டுகிறது. இறுதிப் பகுதி, கதாநாயகியின் பிரதிபலிப்புகள் மூலம் சமூக விதிமுறை மற்றும் அழுத்தங்கள் தாக்கத்தை ஆராய்கிறது. பெண்களுக்கு விழிப்புணர்வாக அமையும் வகையில், படைக்கப்பட்டுள்ள நாவல்.
– -வி.விஷ்வா