பெண்ணிய சிந்தனையுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். கொரோனா நோய் பரவல் காலத்தில், குடும்பங்களில் நிலவிய சிக்கல்களையும் பேசுகின்றன.
உண்மை சம்பவங்கள் அடிப்படையில், கதைகள் உருவாக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. கதாபாத்திரங்கள் வெவ்வேறு வயதில், வெவ்வேறு பொருளாதாரப் பின்னணி உடையவர்களாக படைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை பாதையில் வரும் சிக்கல்களை சமாளிக்கும் திறன் மிக்கவர்களாக, பெண் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
பெண்களின் குரலாக ஒலிக்கிறது. சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் இன்னல்கள், அவற்றை எவ்வாறு கடந்து வருகின்றனர் என்பதை எல்லாம் இயல்பாக காட்டுகிறது. காப்பிய நாயகி மணிமேகலை துறவு பற்றிய விபரமும் அலசப்பட்டுள்ளது. பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் நுால்.
– ராம்