பண்டைய வேதத்தை ஆராய்ந்து மனித தோற்றத்தை பகுப்பாய்வு செய்யும் நுால். சமுத்திர ராஜாவால் முதலில் இயற்றப்பட்ட சாஸ்திரம்.
சமுத்திர ராஜாவின் தெய்வீக தரிசனத்திற்கு காரணமான சாஸ்திரத்தின் தோற்றக் கதையை விவரிக்கிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறும் இந்த பழமொழி, இதை ஆதாரமாகக் கொண்டு தோன்றியது.
மனித இயல்பும், எதிர்காலமும் உடல் உறுப்புகளில் பிரதிபலிக்கின்றன. அழகு என்பது குணங்களின் வெளிப்பாடாக உள்ளது என உரைக்கிறது. முற்பகுதியில் ஆண்களின் சாமுத்திரிகா லட்சணங்களும், பிற்பகுதியில் பெண்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
உடல் அங்கங்கள் குறித்த கணிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள நுால்.
– வி.விஷ்வா