வாழ்க்கை அனுபவங்களைக் கட்டுரை வடிவில் பாடமாகத் தரும் நுால். இரண்டு பெரிய தலைப்புகளில் 25 கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.
பெரும்பேறு என்ற தலைப்பிலான கட்டுரையில், பாடல் பெறும் தகுதியுடைய ஒரு பெண்மணியை அறிமுகம் செய்கிறது. தொடர்ந்து பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், பதவி உயர்வில் ஆர்வம் காட்டாமல் மகிழ்ச்சியாக வாழ்வதை நகைச்சுவையுடன் எடுத்துக் காட்டுகிறது.
இரண்டாம் பாதியில் இலக்கியக் கட்டுரைகள் அணிவகுத்து வருகின்றன. சங்க இலக்கியத்தில் அகத்தையும் புறத்தையும் தெள்ளத் தெளிவாக எடுத்து விளக்கியுள்ளது. திருக்குறள், திருநாவுக்கரசர் தேவாரம் என்று விரிந்து செல்லும் இலக்கிய வீச்சு விரிந்து பரந்துள்ளது. பல திருக்குறளுக்கு புது வெளிச்சம் பாய்ச்சப்பட்டுள்ளது.
– முகிலை ராசபாண்டியன்