சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், பயண இலக்கியம் என எழுத்துலகில் தன்னிகரற்று விளங்கியவரின், சிறுகதை படைப்புகளை அலசி ஆய்வுப்பூர்வமாக கருத்துகளை முன்வைக்கும் நுால். ஏழு தலைப்புகளில் பின்னிணைப்பு விபரம், நுாற்பட்டியல் தரப்பட்டுள்ளது.
சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் முதல் அத்தியாயமாக மலர்ந்துள்ளது. உலக அளவில் அது எப்படி உருவானது, இந்திய அளவில் தாக்கம், தமிழகத்தில் நிலைத்தது குறித்த வரலாற்று தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து, கதை கருவும் உருவும், கதாபாத்திரங்கள், கதைகளில் விரவி கிடக்கும் சமுதாய சிந்தனை, படைப்புத்திறன், மொழிநடை மற்றும் நெகிழ்வுத்தன்மையை விவாதித்து கருத்துகளை தரும் நுால்.
– ஒளி