சூக்கும சரீரம், ஆவி வடிவங்கள், வேறு உலகங்கள், கடந்த பிறவி ஆகியவற்றை விளக்கும் நுால். வாழ்வில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை உடல்களுடன் உலவும் உலகங்களை விளக்குகிறது.
ஒரு வீட்டில் குடியிருப்பவன், வேறொரு இடத்துக்கு போவது போல, உயிர் மற்றோர் உடலுக்குப் போவதாக சொல்கிறது. இந்தத் துால தேகத்தின் உள்ளே இன்னும் நான்கு உடல்கள் அமைக்கப் பட்டுள்ளதாக கூறுகிறது. உடலை தீயிட்டுக் கொளுத்தினால், சூக்கும சரீரம் இங்கு உலவுதலை விட்டு நீங்கியிருக்கும் என்கிறது.
கடந்த பிறவி, வரும் பிறவிகளின் நினைவுகள் குறித்து விளக்குகிறது. பட்டினத்தார், திருமூலர் பாடல்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. சிந்தனையைத் துாண்டும் நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து