தேர்தல் பிரசாரத்தில் பேசப்பட்ட கச்சத்தீவு உரிமை பற்றிய அரசியல் ஒப்பந்தங்கள், நிகழ்வுகளுக்கான பின்னணி சம்பவங்களை விவரிக்கும் நுால்.
தமிழகத்தின் தொடர்புகள், சமகால நடைமுறைகள், வழக்குகள், வாதங்கள் தொகுத்து தரப்பட்டு உள்ளன.
ராமேஸ்வரம் அருகே, கடலில் மனித குடியிருப்பு இல்லாத பகுதி கச்சத்தீவு. மீன்வளம் நிறைந்தது. இந்திய அரசின் ஆளுமைக்குள் இருந்தது. பின், இலங்கைக்கு வழங்கப்பட்டதால் அரசியல் பிரச்னையாகியுள்ளது.
இந்த நிலையில் கச்சத்தீவு வரலாறாக மலர்ந்துள்ளது இந்த புத்தகம். பழங்காலத்தில் இருந்து கச்சத்தீவு மீதிருந்த உரிமை, வழக்கு ஆவணங்கள் துணையுடன் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
கச்சத்தீவு நிலப்பரப்பு பற்றி வரலாற்று தெளிவை தரும் நுால்.
– ராம்