பக்தி இலக்கியங்களை ஆய்வு செய்து கருத்துக்களை உரைக்கும் நுால்.
அழகர் கோவிலின் வரலாறு, திருமூலரின் அட்டாங்க யோகம் கூறும் செய்திகள், மாணிக்கவாசகரின் சைவ நெறி விளக்கம், சித்தர்களின் உடலியல் சிந்தனை விளக்கம் என செய்திகளை கூறுகிறது.
மனு முறை கண்ட வாசகம் கூறும் பசிப்பிணியின் விளக்கம், குமரேச சதகம் காட்டும் அரசன், நா.பா.,வின் வாழ்வும் எழுத்தும், அவரது சிறுகதைகளில் உளவியல் கூறுகள் பற்றி எல்லாம் விளக்கம் உள்ளது. பயனுள்ள ஆய்வு நுால்.