ஆச்சரியத்தை அள்ளித்தரும் தகவல் தொகுப்பை போனசாக தரும் நாவல் புத்தகம். தப்பு தண்டா செய்து பணக்காரன் ஆனவன், பணத்தை காப்பாற்ற கட்சியில் சேருவதையும், பழிவாங்க பாவங்களுக்கு அஞ்சாமல் செயல்படுவதையும் கதை சொல்லுகிறது.
நேர்மையாகச் செயல்படுபவனுக்கு அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் தான். இது போன்ற நடைமுறை உண்மைகளை தெரிவிக்கிறது. மூன்று கோடி ரூபாய் கட்சிக்கு நிதி, இரண்டு கோடி செலவு செய்யும் வசதி இருந்தால், எம்.எல்.ஏ., ‘சீட்’ கிடைக்கும்; வெற்றியும் கிடைக்கும். பின், போட்ட முதலீடை இந்த வியாபாரத்தில் எடுத்து விடலாம் என எடுத்துக் காட்டுகிறது. திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 37 இடம் பெறவில்லை என்ற தகவலும் உள்ளது.
– சீத்தலைச் சாத்தன்