திருக்குறளுக்கு எளிய முறையில் புரியும் வண்ணம் எழுதப்பட்ட உரை தமிழ்த்தாய்க்கு மற்றுமோர் அணிகலனாகிறது. இந்த உரை மிகவும் நேரடித் தன்மை கொண்டது. சுருக்கமாகவும், மனதில் ஆழப் பதிவதாகவும் இருக்கிறது.
இருக்க வேண்டியதைத் தெரிவித்த வேகத்தில், இருக்கக்கூடாததையும் எடுத்துரைத்துள்ளது. பட்டை தீட்டப்பட்ட வைரத்தின் தன்மையைப் போல் உள்ளது. நன்னுாலாரின் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற கூற்றுக்கு ஒப்பாக அமைந்திருக்கிறது. மேலும் மேலும் படிக்கும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது. பாமர மக்களும் திருக்குறளைப் படிக்கலாம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஆங்கில மொழிபெயர்ப்பும் செய்திருப்பது அருமையாக உள்ளது
– இளங்கோவன்