திருவடி முதல் திருமுடி வரையான உடலின் ஒவ்வொரு உறுப்புகளைப் பற்றிய அரியின், சிவனின் திருவிளையாடல்கள் விளக்கப்படுகின்றன. சிறுசிறு கதைகளின் வழியே எளிமையாக மனதில் பதியும் வகையில் சொல்லப்பட்டுள்ள வித்தியாசமான நுால்.
சிவபக்தனை திருத்திய திருமாலின் கதை சுவாரசியம். ராதையின் அன்பை உணர்த்துவதற்காக வயிற்றுவலி நாடகமாடிய பெருமாள், பாவாஜி என்ற பக்தருடன் தாயக்கட்டை ஆடிய அழகு, வாயால் அதிசயம் செய்த கண்ணன், வாயால் கெட்ட கைகேயி, முனிவரின் கை நீளாத அதிசயம், பிட்டு விற்ற கிழவிக்காக மண் சுமக்க வந்த ஈசனின் கருணை என ரசனையுடன் உள்ளன. இவற்றை படித்தால் மட்டுமே அனுபவிக்க முடியும்.
– எம்.எம்.ஜெ.,