குறும் படங்களுக்காக உருவாக்கப்பட்ட கதை, வசன நுால். ஒன்பது சுவைகளுக்கு ஒரு பகுதி, ஒன்பது நாடகங்கள். அடுத்து, பல்சுவை என ஆறு நாடகங்கள் படிப்பதற்கு ஏற்ற விதத்தில் உள்ளன.
சினிமா எடுப்பதாக விளம்பரம் செய்து, நடிக்க வருவோரிடம் பணம் வாங்கி படம் பிடிக்கலாம் என எண்ணுபவரின் திட்டங்கள் தவிடு பொடி ஆகின்றன. அப்படிப்பட்டவரை ஒரு ரவுடி எப்படி புரட்டி எடுப்பதை சொல்லுகிறது ஒரு கதை.
வளர்ப்புத் தாயையும், வளர்ப்பு மகனையும் நினைத்துப் பேசும் வளர்ப்பு தந்தை எப்படி சூறையாடப்படுகிறார் என்பது இன்னும் ஒரு கதை. கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., தியாகச் செம்மல் சிவா சந்தித்து கலந்துரையாடுவது வித்தியாச மாக உள்ளது.
– சீத்தலைச் சாத்தன்