ஆடிப் பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது என்பதை நிரூபிக்கும் நாட்டுப்புற பாடல்களின் தொகுப்பு நுால்.
வாய்மொழியாக கிராம மக்கள் பாடும் பாடல்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்பு, குழந்தைப் பாடல்கள் என்ற பெயருடன் துவங்கியுள்ளது. ஒவ்வொரு பாடலுக்கும் முன் தோன்றிய சூழல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆய்வு மனப்பான்மையுடன் தரப்பட்டுள்ளது.
ஆண், பெண் என இருபாலரும் இணைந்து பாடுவதாக அமைந்துள்ளன. இது வேலையை பகிர்ந்து கொள்ளும் மனப்பக்குவத்தை காட்டுகிறது. கதைப்பாடல்கள் தலைப்பில் கோவலன் கதை, சந்திரமதி புலம்பல் என்பவை உள்ளன. கலைநயம் வெளிப்படும்படியாக தொகுக்கப்பட்டுள்ளது. ஆய்வு தனித்துவம் மிக்க நுால்.
– முகிலை ராசபாண்டியன்