நடிகன் வாழ்நாளில் ஏற்பட்ட சாதனை, சோதனைகளை விளக்கும் நாவல் நுால். ஒரு சாதாரண மனிதனுக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வருகிறது. நடிகருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகின்றனர். ரசிகர்கள் உயிரினும் மேலாகக் கருதி தத்ரூபமாக அமைந்தது நடிப்பு என பாராட்டினர்.
எல்லா செயல்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு உண்டு என்று நடிகன் போட்ட கணிப்பு, சிக்கலை உருவாக்கியது. அரசியல் கட்சி ஆரம்பித்தான்; தேர்தலில் தோல்வி, பணம், புகழ் எல்லாம் இழந்தான்.
பேரிழப்புடன் வேறு மாநிலத்திற்கு போய் கோவில் வாசலில் பிச்சை எடுத்து வாழ்ந்தாகக் காட்டுகிறது. ஆதரவற்றறவனின் மரணமாக முடிகிறது. நடிகன் வாழ்க்கை மூலம் உரிய தகுதியை வைத்து வாழ வேண்டும் என்பதே நாவல் உணர்த்தும் நீதி.
– புலவர் ரா.நாராயணன்