மரணத்தை மாற்றி அமைக்கும் மகத்தான ஆற்றலுடன் விளங்கினார், ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகள். திருத்துறையூரில் இருந்து அரிசி, உணவுப் பொருட்கள், வள்ளலார் சித்தி வளாக மாளிகைக்கு வந்தன. அடிகளார் கனவில் வந்து உணவுப் பொருட்களை கேட்டதால், எடுத்து வந்திருப்பதாக தெரிவித்தார், வண்டியில் கொண்டு வந்தவர். ‘நாளைய உணவுக்கு என்ன செய்வது’ என்று வருந்திய நேரத்தில், ராமலிங்க அடிகளார் செய்த அற்புதத்தை எண்ணி ஆச்சரியப்பட்டனர்.
வாழ்ந்து மறைந்த 12 சித்தர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் பட்ட துன்பங்கள், அதைத் தாண்டி மக்களுக்காக செய்த தியாகங்கள், கிடைத்த பலன்களை எளிய நடையில் விளக்கும் நுால்.
– எம்.எம்.ஜெ.,