நீதி புகட்டும் கதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வித அறம் சார்ந்து சொல்லப்பட்டுள்ளது. மாணவர்கள் படித்தால் நல்லது.
வழியில் கண்டெடுத்த பர்ஸ்; அதில் இருந்த மருந்து சீட்டு பற்றி விசாரித்து தக்க சமயத்தில் உயிர் காத்தவன் பாராட்டுக்கு உரியவனாகிறான். கஞ்சத்தனம் அதிகம் பிடித்தால், இரட்டிப்பு செலவு என்ற உண்மையை ஒரு கதை சொல்கிறது.
பிடித்தம் போக சம்பளம் என்று அனாவசிய செலவுகளைத் தவிர்க்க, அம்மாவிடம் கொடுக்கும் மகன், ‘பிடித்தம்’ என்கிறார். குடும்ப எதிர்காலத்திற்காக சேமிக்க சொல்கிறது. ஜாதிக்கு புதிய விளக்கம் சொல்லும் கதை ஜோர். ஏமாற்றியவனை காலம் ஏமாற்றியது பிராப்தம். ஒவ்வொரு கதையிலும் போதனை உள்ளது.
– சீத்தலைச் சாத்தன்