சமூகத்தில் பாலின சமத்துவம் ஏற்பட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்ட, 20 கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
சமூக செயல்பாடுகளில் பெண்கள் எதிர்பார்ப்பதை, வித்தியாசமான பார்வையில், கூர்மையான கருத்தை வெளிப்படுத்துகிறது. புதுமையான தலைப்புகள் வாசிக்கும் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன.
ஆண் சிரித்தால் கம்பீரம்; பெண் சிரித்தால் அடக்கமின்மை; பெண் குழந்தைகளுக்கு பியூட்டி பார்லர்; ஆண் குழந்தைகளுக்கு ஸ்போர்ட்ஸா போன்று கட்டுரைகள் புனையப்பட்டுள்ளன. மனித மனதில் ஆழத்தில் பதிந்திருக்கும் பாலின பாகுபாடுகளை வித்தியாசமான கோணத்தில் அலசுகிறது. பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரான கருத்து அல்ல என்ற விழிப்புணர்வை தரும் நுால்.
-– ராம்