அதிகாரம், சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றம், சிக்கல்களை விவரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தென் அமெரிக்காவை காட்சிப்படுத்துகிறது.
உலக அளவில் புகழ் பெற்ற 33 படைப்புகள் உள்ளன. அவை, கொலம்பியா, மெக்சிகோ, கியூபா, உருகுவே, ஈக்வெடார் போன்ற நாடுகளின் சமூக நிலையை பேசுகின்றன.
ஒவ்வொரு படைப்பும், எழுதியவரின் குறிப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த நாட்டு பண்பாட்டை அறிந்து கொள்ள உதவுகிறது. அரசியல், பொருளாதார பின்னணியுடன் உலகமயமாக்கல், புலம் பெயர்தல், அடையாள சிக்கல் என பல கருத்து நிலைகளை உள்ளடக்கியது. மொழியாக்கம் செய்து தொகுத்துள்ளார் அமரந்தா. தென் அமெரிக்க நாடுகளில் நிலவும் சமூகச்சூழலை சொல்லும் சிறுகதை வடிவிலான படைப்புகளின் தொகுப்பு நுால்.
– ஒளி