துன்பத்தில் கைதுாக்கிவிட்டவரை மறக்காமல் இருக்க வேண்டும் என வலியுறுத்தும் நாவல்.
சிறு வயதில் துன்பங்கள் அனுபவித்த இளைஞனுக்கு அத்தை வழிகாட்டுகிறாள். அவன் தாய் நோயில் படுக்க, தந்தை கவனித்துக் கொள்ளும்படி ஆகிறது. தந்தையின் தங்கை, சிறுவனை அழைத்துச் சென்று வளர்க்கிறாள். துவக்கத்தில் சில துன்பங்கள் அனுபவித்தாலும், அத்தை குடும்பத்தில் பிரச்னை வரக்கூடாது என கவனமாக இருக்கிறான் சிறுவன்.
இவ்வாறு வளர்ந்து படித்து செல்வாக்கு பெற்று அத்தையை பராமரிக்கிறான். விதவையான அவள் மகளுக்கு வாழ்க்கை தர நினைக்கிறான். ஆனால், அந்த பெண் எடுக்கும் முடிவு சுவாரசியத்தை கூட்டுகிறது. என்ன நடந்தது என அறியும் ஆர்வத்தை துாண்டும் நாவல்.
– முகில்குமரன்