திருமூலர், அகத்தியர், தேரையர், சிவவாக்கியர், பாம்பாட்டி, குதம்பை, இடைக்காடர் என, 20 சித்தர்களை அறிமுகம் செய்யும் நுால். தேர்ந்தெடுத்த பாடல்களுக்கு எளிய நடையில் விளக்க உரை தரப்பட்டு உள்ளது.
திருமூலர் இயற்றியதாகக் கூறப்படும் நுால்கள் நிரல்படுத்தப்பட்டிருப்பதோடு, அவரது சீடர்கள் குறித்தும் குறிப்பிடுகிறது. அவர் எழுதிய புகழ் பெற்ற பாடல்களும் விளக்கப்பட்டுள்ளன. சிவவாக்கியர் பாடிய, ‘நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே’ போன்ற பாடல்கள் ஓசை நயத்துடன் மிளிர்வது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சித்தர் பாடல்களோடு சங்க இலக்கியம், திருக்குறள், சமஸ்கிருத ஸ்லோகங்கள், பொன்மொழிகள் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன. நிறைவாக பாரதியும் ஒரு சித்தரே என்று சிலாகிக்கிறது.
– புலவர் சு.மதியழகன்