காலநிலை மாற்றத்தை தடுக்கும் செயல்முறைகளில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்து வைக்கும் சர்வதேச சட்டங்களின் தொகுப்பு நுால்.
சர்வதேச நீதிமன்ற இந்திய பிரதிநிதி நீதிபதி தல்வீர் பண்டாரியின் முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. மூத்த வழக்கறிஞர் ஜதீந்தர் சீமாவின் கடும் உழைப்பில் உருவாகியுள்ளது.
காலநிலை மாற்றம் குறித்த கொள்கை முடிவுகள், அமல்படுத்தும் சட்ட நடைமுறைகள் குறித்து சர்வதேச அளவில் விபரங்கள் தரப்பட்டுள்ளன.
இந்த நுால், ஏழு பெருந்தலைப்புகளை உடையது. காலநிலை மாற்றத்துக்கான காரணங்கள் தெளிவாகத் தரப்பட்டுள்ளன.
அதன் விளைவுகள் தொடர்பாக உலக அளவிலான முறையீடுகளை நெறிப்படுத்தும் சட்ட விதிகளை உள்ளடக்கியது. தரமிக்க தயாரிப்பான இந்த புத்தகத்தை, ‘அமேசான்’ இணையதள சந்தையில் வாங்கலாம்.
– ஒளி