மனதின் ஆழத்தில் அமிழ்ந்திருக்கும் ஆற்றலை பயன்படுத்தும் உத்தியை கற்றுத்தரும் நுால்.
வாழ்வில் இக்கட்டுகள் ஏற்படும்போது, கண் சிமிட்டும் நேரத்தில் தான் முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அது போன்ற வேளையில் சரியான பாதையை தேர்வு செய்வது குறித்து அறிவுறுத்துகிறது.
சிந்தனை ஆற்றலை வளர்க்க உதவும் கருத்துகளை உடையது. ஆறு தலைப்புகளில் இதுகுறித்து பேசப்பட்டுள்ளது. இறுதியாக கருத்துகள் அலசி தொகுத்து தரப்பட்டுள்ளன. சுற்றியிருக்கும் உலகை புரிந்து கொண்டு அதற்கேற்ப, முடிவு எடுத்து வாழ்வை அமைக்க வழிகாட்டும் வகையிலான நுால்.
– ஒளி