காதல் என்பதை காமத்துடன் மட்டும் தொடர்புபடுத்தாமல், அன்பு, பாசம், நேசம், அர்ப்பணிப்பு உணர்வு, மன உறுதியை உணர்த்தும் நுால். சுவாரசியம் குன்றாமல் எளிய மொழி நடையில் எழுதப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தில் 12 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பழந்தமிழ் கவிதை மையப் பொருளாகிறது. கவிதையுடன் பொருள் தந்து, காதல் நிகழ்வு காவியமாக தீட்டப்பட்டுள்ளது. கடைசியாக பறவையின் காதல் பற்றி சுவையூட்டுகிறது.
வாழ்வில் தனித்துவமாக சோதனைகளை எதிர்கொண்டு, முறியடித்து இன்பமாக வாழ்ந்தவர்களின் வரலாற்றை கூறுகிறது. உலக அளவிலான நிறவெறி, துரோகம் எல்லாம் விளக்கப்பட்டுள்ளது. காதலர்களின் உன்னதப் பிணைப்பை எடுத்துரைக்கும் நுால்.
– ராம்