மனித உடல் நாடிகளின் இலக்கணம், செந்துாரம், குளிகை, லேகியம், கஷாயம், தைலம் போன்ற மருந்து தயாரிக்கும் முறையை விளக்கும் நுால். மருந்தால் நோய் நீக்கும் முறையும், உணவு பத்தியமும் விவரிக்கப்பட்டுள்ளது. மருந்து தயாரிக்கும் மூலப்பொருட்கள் பற்றியும் கூறுகிறது.
வைத்தியம் பற்றி 12 அத்தியாயங்களில் விளக்குகிறது. 152 தலைப்புகளில் மூலிகை மருத்துவத்தின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. உடலில் ஓடும் நாடியை எவ்வாறு அறிய வேண்டும் எனவும் தெரிவிக்கிறது.
ஆண், பெண்களுக்கு நாடி பார்க்கும் முறை மற்றும் நேரம், காலத்தை சொல்கிறது. நாடியை வைத்து மரணத்தை அறியலாம் என்கிறது. நோய்கள் நீக்கும் குளிகைகளை அகத்தியர் பாடலுடன் விளக்கும் நுால்.
– புலவர் ரா.நாராயணன்