பழந்தமிழ் நுாலான தொல்காப்பியம் துவங்கி தமிழ்மொழியின் பல்வேறு நிலைகளை விவரிக்கும் நுால். வெவ்வேறு சூழலில் சொற்பொழிவுகளாக நிகழ்த்தப்பட்டவை கட்டுரை வடிவம் பெற்றுள்ளன. மொத்தம், 20 தலைப்புகளில் உள்ளது.
இயல், இசை, நாடகம் என விரிந்திருந்த மொழி, பின்னர் இயற்றமிழாக சுருங்கியது குறித்த கவலையை வெளிப்படுத்துகிறது. இசைத்தமிழ், நாடகத்தமிழ் குறித்த விபரங்கள், தெள்ளத் தெளிவாக இலக்கிய மேற்கோள்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
சமய நிறுவனங்கள் இசைத்தமிழை வளர்த்தது குறித்த விபரம் தனியாக தொகுத்து தரப்பட்டுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள இசை மரபுகள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. தமிழின் சிறப்பியல்புகளை விவரிக்கும் நுால்.
– மதி