தேசிய சட்டப் பல்கலையில் வேந்தராக பணியாற்றியவரின் உரைகளின் தொகுப்பு நுால். அரசியலமைப்பின் பரிணாமம், அறிவுசார் சொத்து உரிமை பற்றிய அலசல், கல்வியின் அத்தியாவசியம் போன்ற தலைப்புகளில் உள்ளன.
சட்டத் தொழிலில் வாய்ப்புகள், நீதிமன்ற மொழி, அரசியல் சட்டம் உள்ளிட்ட தலைப்புகளில் ஆற்றிய பேருரைகளும் உள்ளன. ஒவ்வொரு உரையும் ஏராளமான தகவல்களோடு அமைந்துள்ளது. சட்ட மாணவர்கள், வழக்கறிஞர்கள் தரத்தை மேம்படுத்தி அறிவூட்டுவதாக உள்ளது. சட்ட பயன்பாடு சார்ந்த அனுபவத்தை தருகிறது. தமிழ் மொழியில் சிறப்பாக ஆக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் நுணுக்கங்களை மேலும் தெளிவுடன் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ள நுால்.
– ராம்