சமண சமயக் கோட்பாடுகளை உள்ளடக்கி புனையப்பட்ட காப்பியமான சீவக சிந்தாமணியின் கதையமைப்பை கைக்கொண்டு புதினம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள நுால்.
எளிய மொழிநடையில் தொய்வின்றி படிக்கத் துாண்டுகிறது. ஏமாங்கத நாட்டின் நீர் வளம், வயல் வளம், இயற்கைக் காட்சிகளை சொல்லும் வருணனை மனதை ஈர்க்கிறது. இறையாண்மை, அரசாட்சி, போர் முறைகள், காதல், வணிகத்தை சுற்றி உயிர்ப்புமிக்க உரையாடல் வலுசேர்க்கிறது. சீவக சிந்தாமணியை புரிய உதவும் புதினம்.