இறைவன், இயற்கை, தேச பக்தி, பல்துறை ஆளுமைகள், முக்கிய நாட்கள் என ஐந்து தலைப்புகளில் கவிதைகள் இடம் பெற்றுள்ள நுால். விநாயகர் துவங்கி முருகன், சிவன், திருமால், துர்கா, மாரியாத்தா, சாய்பாபா போன்ற தெய்வங்களை வாழ்த்துகிறது. நீங்கா வரம் அருள பாமாலைகள் சூட்டப்பட்டுள்ளன.
‘ஊற்றாய் உருவெடுத்து, ஊர் தாகம் தீர்த்து உழவுக்குக் கைகொடுக்கும் ஆறு’ என ஆற்றை வர்ணிக்கிறது.
அழகு, நாணல், விடியல், பிறைநிலவு என இயற்கை பாடல்கள் உள்ளன. ‘மூச்சின் சுவாசக் காற்றே முழு முதற்கடவுளே’ என மொழி துதியும் இடம்பெற்றுள்ளது. தேசபக்தி பாடல்களில் காந்தியடிகள், காமராஜர், பாரதி என சான்றோர் புகழ் பாடுகிறது. விழிப்புணர்வை ஏற்படுத்தும் நுால்.
–- புலவர் சு.மதியழகன்