பல துறைகளில் இலங்கும் சுவைமிக்க செய்திகளை தாங்கிப் படைத்துள்ள 165 பாடல்களின் தொகுப்பு நுால். பாடலுக்கு ஏற்ப படங்களுடன் அச்சிடப்பட்டு இருப்பது மிகவும் சிறப்பாக உள்ளது.
‘காதல் ஒன்றே பெரிதென்றால், கல்வி கற்றுப் பயன் என்ன’ என பாடி, இளமையில் கல்விக்கு தரவேண்டிய முக்கியத்துவம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து, ‘மானிடா உன்னிடம் காரம் வேண்டும். அது ஆளை அடக்கும் அதிகாரம் அல்ல; அனைவரும் போற்றும் உபகாரம்; அன்பை சுவைக்கும் சுருங்காரம்’ என வாழ்வின் பயனைச் சொல்கிறது ஒரு கவிதை.
‘கண் இரண்டு என்றாலும், ஒரு பொருளை பார்க்கும் கால் இரண்டு என்றாலும் ஒரு வழியே செல்லும்’ என ஒற்றுமைக்கு வழிகாட்டுகிறது. உணவு இல்லை என்றால் உணர்வு இல்லை என்பது போல் உள்ள நுால்.
– சீத்தலைச்சாத்தன்