திருக்குறளின் காமத்துப்பால் பற்றி பேசும் நுால். காதலை எங்கே மென்மையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும், எங்கே வன்மையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் திருவள்ளுவர் உணர்த்தியதை காட்டுகிறது. திருக்குறளில் அறத்துப்பாலும், பொருட்பாலும் எல்லாராலும் பயன்படுத்தப்படுகிறது. காமத்துப்பாலை கொஞ்சம் தள்ளி வைப்பர்.
இந்த புத்தகம் அதற்கு மாறாக திருக்குறளில் உள்ள காதல் பற்றி எடுத்துரைக்கிறது. காதலையும் திருமண வாழ்க்கையையும் எளிமையாக எடுத்துரைக்கிறது. இலக்கிய ஆழத்தை காட்டுகிறது. அறம் உரைக்கும் அறிஞனாகவும், பொருளுரைக்கும் ஆசானாகவும் வெளிப்படும் திருவள்ளுவர், காமத்துப்பாலில் கவிஞனாக வெளிப்படுவதைக் காட்டும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்