ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணிக்கு பொழிப்புரை, அருஞ்சொல் விளக்கம் தரப்பட்டுள்ள நுால். சமணக் கொள்கைகளை விவரிக்கும் விருத்தப்பா, காப்பியங்களில் முதலாவதாகத் திகழ்கிறது.
சிக்கல்களுக்கு இடையே காப்பிய நாயகன் சீவகன் தோன்றினான். துன்பங்களுக்கு இடையே வளர்ந்தான். அறிவும், அன்பும் உடையவனாக வாழ்ந்தான். இழந்த ஆட்சியை மீண்டும் பிடித்தான். ஆட்சியை மகனிடம் ஒப்படைத்து துறவறம் மேற்கொண்டான்.
மூன்றாம் பகுதியில் சுரமஞ்சரியார், மண்மகள், பூமகள், இலக்கணையார், முத்தி என்ற ஐந்து இலம்பகங்கள் உள்ளன. நல்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் என்ற மும்மணிகளை விளக்குகிறது. வாழ்க்கையை செம்மை செய்ய உதவும் நுால்.
– புலவர் ரா.நாராயணன்