கையடக்க பதிப்பாக வந்துள்ள சிறுவர் நாவல் நுால். உணர்த்தும் செய்திகளோ பெரியது.
இரண்டு குழுக்களாக பிரிந்து சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகின்றனர். அடிக்கடி முறைத்துக் கொள்ளும் அவர்கள், விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார் சிலை வைத்து கொண்டாட முடிவு செய்கின்றனர்; அதற்காக நன்கொடை வசூலிக்கின்றனர். இதை இம்ரான், ஜோயல் வீட்டில் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பது சுவாரசியமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
மதத்தை காரணம் காட்டி மக்களை பிரிக்கக்கூடிய சக்திகளை முறியடித்து, பயனுள்ள வகையில் கொண்டாடுவதை அழகாகச் சொல்கிறது நாவல்.
பல மதங்களைச் சார்ந்தவர்களும், அன்பு என்ற பேரதிசயம் காரணமாக ஒன்றுபட்டு நிற்கும் இடம் அபாரம். பெரியவர்களும் படிக்க வேண்டிய நாவல்.
– ஊஞ்சல் பிரபு