வழக்கமான பாணியில் இருந்து சற்று மாறுபட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். கணவனின் ஆசையை பூர்த்தி செய்ய மகளையே விதவையாக்கிய தாய்; சிலரின் வெறுப்பு மற்றும் பழிச்சொல்லுக்கு ஆளாகித் தவித்த ஓவியக் கலைஞன்; வஞ்சகத்தால் மன அழுத்தத்திற்கு உள்ளான பெண்ணிடம் வருந்தி பாவமன்னிப்பு கோரும் சகோதரி என வித்தியாசமான பாத்திரங்களை உடையது.
தாழ்வு மனப்பான்மை, உடல் ஊனம், அழகு மற்றும் அறிவுத் திறன் பற்றிய சுய மதிப்பீடுகள் காரணமாக வரும் அழுத்தம், தொழில், உத்தியோகம், காதல் இவற்றில் தோல்வி, நிறைவேறாத எதிர்பார்ப்புகள் இவையெல்லாம் கூட மனச்சிதறலுக்கு காரணமாவதை உரைக்கும் நுால்.
–- இளங்கோவன்