உடலையும் மனதையும் நலத்துடன் பேண வழி வகை சொன்ன மகான் வேதாத்திரியின் படைப்புகளை திறனாய்வு செய்து, அவற்றின் அருட்செறிவுகளை விளக்கும் நுால். அவருக்கு முன் வாழ்ந்த மகான்களின் கருத்துடன் இணக்கமாக உள்ளதை சுட்டிக்காட்டுகிறது.
மனித குலம் அமைதியும், நிறைவும் பெற்று வாழும் வழிகளை, கவிதை, பாடல், சொற்பொழிவுகளில் விளக்கியவர் வேதாத்திரி.
கடுமையான உழைப்பில் உருவான அவரது படைப்புகளின் சிறப்பியல்புகளை ஆராய்ந்து கருத்துகளை கூறுகிறது. படைப்புகளை அறிமுகம் செய்து, அவற்றின் வடிவம், உருவாக்கம், வாழ்வியல் சிந்தனைகள், மெய்யியல் சிந்தனைகள், மனித வள மேம்பாட்டு சிறப்புகளை எடுத்துரைக்கிறது. பெரிய தத்துவங்கள் எவ்வாறு எளிமையானவை என ஆராய்ந்து சொல்லும் நுால்.
– ராம்