ஆண்டாள், பெரியாழ்வார் வாழ்க்கையை விளக்கும் கவிதை நாடக நுால்.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் வரலாறும், திருமணமும் குறித்து விளக்குகிறது. இது, மூன்று இயல்களாக அமைந்துள்ளது. நாடகக் காட்சிகள் திவ்ய தேசங்களில் அரங்கேற்றப் பட்டுள்ளன. நேரில் காண்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெரியாழ்வார் பாண்டிய மன்னனின் ஐயத்தைப் போக்கி பல்லாண்டு பாடியது பற்றி விளக்குகிறது; அதன் வரலாற்றையும் விவரிக்கிறது. துளசிச் செடியில் கோதை கிடைத்த வரலாறு உள்ளது.
ஆண்டாள் பாடிய திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் இடம் பெற்றுள்ளன. தொடுத்த மாலையை அணிந்த காட்சியை விவரிக்கிறது. கிணற்று நீரில் அழகு பார்த்ததாகக் கூறப்பட்டு உள்ளது.
– புலவர் ரா.நாராயணன்