ஐரோப்பியரான ருட்யார்டு கிப்ளிங்எழுதிய சிறுகதைகளின் நுால். நோபல் பரிசு பெற்றவரின் படைப்புகள் எளிய நடையில் தமிழில் தரப்பட்டுள்ளன. சிறுவர் – சிறுமியர் படித்து மகிழ சாகசம் நிறைந்த கற்பனைகளை உள்ளடக்கியது.
தொகுப்பில், 10 கதைகள் உள்ளன. திமிங்கலத்துக்கு தொண்டை சிறிதானது எப்படி? ஒட்டகத்துக்கு திமில் வந்தது எப்படி? கடலுடன் விளையாடிய நண்டு என தலைப்புகளே சுவாரசியம் ஊட்டுகின்றன; கற்பனையை திறக்கின்றன.
காட்சி மயமாக கதைகள் விவரிக்கப்பட்டுள்ளன. மனிதர்களும், விலங்குகளும் பாத்திரங்களாகி சாகசங்கள் புரிந்து உற்சாகமூட்டுகின்றன. கதைகளின் அடிநாதமாக விலங்குகளுக்கு சிந்திக்கும் திறன் உண்டா என்று கேட்க வைக்கிறது. சுவாரசியம் நிறைந்த சிறுவர் நுால்.
– ராம்