எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அரசியல் வாழ்வை விவரிக்கும் நுால். கட்சியை பழனிசாமி கைப்பற்றியது வரை சொல்கிறது.ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்திய இரண்டாம் கட்ட தலைவர்கள் பின்னர் என்ன ஆயினர் என்பதை விவரிக்கிறது.
எம்.ஜி.ஆர்., எழுதி வைத்த உயில், ஆழ்மனதில் இருந்த எண்ணங்களை பகிர்கிறது. அரசு இடங்களை தானமாகக் கொடுத்து, வள்ளல் ஆனதை கூறுகிறது.
தி.மு.க.,வில் இருந்து விலகிய காரணம், அடுத்த வியூகம், உடன் இருந்தவர்கள், விலகியவர்கள் என பட்டியல் போடுகிறது. ஜெயலலிதா கடந்து வந்த பாதை, இன்னல்களை கடந்த துணிச்சல், சசிகலா வருகை, முதல் ஆசிட் வீச்சு, சொத்து குவிப்பு, தீர்ப்பு, மரணம் வரை விவரிக்கிறது. தலைவர்களின் செயல்பாடுகள் குறித்த நுால்.
– -டி.எஸ்.ராயன்