தொன்மை நாகரிகத்தின் விளைநிலமான நெல்லை மாவட்ட வரலாற்றை பதிவு செய்துள்ள நுால். பகுதிகளின் சிறப்புகளை தொகுத்து உரைக்கிறது. மாவட்டம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து தகவல் திரட்டி எழுதப்பட்டுள்ளது.
துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி என பிரிக்கப்பட்டுள்ள நிலப்பகுதி, அன்று திருநெல்வேலி மாவட்டம் என அழைக்கப்பட்டது. இதன் பொது வரலாறு, பண்பாடு, வேளாண்மை, தொழில் வளர்ச்சி, வணிகம், ஆட்சி முறை உட்பட, 15 தலைப்புகளில் தகவல்களை தருகிறது.
புத்தகம் எழுதப்பட்ட போது இருந்த கல்வி நிலை, மருத்துவ வசதி, கலைகளின் வளர்ச்சி குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. வரைபடங்களுடன் தொகுக்கப்பட்டுள்ள உள்ளூர் வரலாற்று நுால்.
– மதி