காதலின் மென்மையான உணர்வுகளை உரைக்கும் நாவல்.
தந்தையின் பணி மாற்றத்தால் திருச்சி கல்லுாரியில் சேர்கிறாள் கோதை. வாணி என்பவள் தோழியாக அமைகிறாள். வாணியின் அத்தை மகள் ராணி. இவள் வாணியின் அண்ணன் கண்ணனைக் காதலிக்கிறாள். இருவரும் சாலை விபத்துக்குள்ளாகின்றனர். பலமான காயம்பட்ட கண்ணன் தாம்பத்திய வாழ்வில் ஈடுபடும் தகுதியை இழக்கிறான்.
இதை அறிந்து காதலைத் துாக்கி எறிகிறாள் ராணி. கோதை கண்ணனுக்கு ஆறுதலாய் பணிவிடை செய்கிறாள். அவனது ஏற்றுமதி நிறுவனத்தில் துணையாக இருக்கிறாள். அவளைக் காதலிக்கிறான் கண்ணன். கோதையின் மாமன் மகன் முகிலனும் காதலிக்கிறான். இப்படி காதல் கோணங்களை நவிலும் நாவல்.
– புலவர் சு.மதியழகன்