இந்தியா முழுதும் பயணித்து மக்களிடம் கண்ட மனிதநேயம் பற்றி உரைக்கும் நுால்.
ஒடிசாவில் புரி ஜகந்நாதர் சிறப்பை குறிப்பிடுகிறது. இமாச்சலப் பிரதேசம் அதிகமாக நீர்வழி மின்சாரத்தை உற்பத்தி செய்வதை பறைசாற்றுகிறது.
தேசப்பிரிவினையால் ஏற்பட்ட வரலாற்றின் சாட்சியாக பாகிஸ்தான் பகுதி, பஞ்சாப் சியால்கோட்டில் உள்ள மரத்தை நெஞ்சை நெகிழும் வண்ணம் விவரிக்கிறது.
இயற்கை அமைப்பு, மக்களின் பழக்க வழக்கங்கள், கலைத்திறன் விவரிக்கப்பட்டுள்ளது.
மொழியால், மதத்தால், உணவால், உடையால் வேறுபட்டிருந்தாலும், உணர்வால் இந்தியர் என்ற அடையாளத்தோடு விளங்குவதை விவரிக்கிறது. பாரத பெருமை பேசும் நுால்.
–- புலவர் சு.மதியழகன்