மகத்தான சாதனை புரிந்த பெருமக்களின் அருமை, பெருமையை தொகுத்து தரும் நுால்.
தமிழகத்தில் நடந்த ரயில் விபத்துக்கு பொறுப்பு ஏற்று, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் லால் பகதுார் சாஸ்திரி. பத்து ஆண்டுகள் அமைச்சர் பதவியில் இருந்தும் தனக்கென வீடோ, வாகனமோ வாங்காதவர் கக்கன்.
இறுதிச் சடங்குக்கு தொகையைத் தயாராக வைத்திருந்த கல்வித் தந்தை மால்கம் ஆதிசேஷய்யா. கிருஷ்ணராஜசாகர் அணை, திருமலை திருப்பதி மலைப்பாதை, கங்கை ஆற்றின் நடுவே பாலம் உருவாக்கிய பொறியியல் அறிஞர்விஸ்வேஸ்வரய்யா போன்றோர் சாதனைகள் எழுச்சி ஊட்டும். கல்வியும்,சோறும் விலையின்றித் தந்து, ஏழை நிலையை உயர்த்திய காமராஜர் போன்ற 60 தலைவர்களின் தியாகங்களின் பெருமை பேசும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்