முகப்பு » வர்த்தகம் » மார்க்கெட்டிங்

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

விலைரூ.280

ஆசிரியர் : சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: வர்த்தகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வியாபாரத்தில் வெற்றி பெற வழி காட்டும் நுால். அனுபவமே வெற்றிக்கு முதல் படி என சொல்கிறது.

தனித்துவம் மூலம் வணிகத்தை பெருக்கும் வழி முறைகளை தருகிறது. ஐந்து பெரும் பிரிவுகளில் 25- கட்டுரைகள் வணிகத்தைப் பற்றி கூறுகின்றன. காசு செலவில்லாமல் பப்ளிசிட்டி பெறுவது எப்படி, வருமுன் காக்கவும் வந்த பின் பார்க்கவும், லேடீஸ் ஸ்பெஷல் போன்ற தலைப்புகளில், மார்க்கெட்டிங் மந்திரம் என்ற வணிக முறையை கூறுகிறது.

கஸ்டமர், விற்பனை, லாபம் அதனால் இன்பம், இந்த நான்கு வகைகளை குறிப்பிட்டு விளக்குகிறது. மக்களுக்கு உதவி செய்து, அதன் வழியாக விளம்பரப் படுத்துவது, வெற்றிப் பாதைக்கு வழி வகுக்கும் என்கிறது. வணிகர்களுக்கு பயன் தரும் நுால்.

– பேராசிரியர் ரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us