பாரம்பரிய கராத்தே பற்றிய செய்திகளைத் தெரிவிக்கும் நுால். ஜப்பானில் தோன்றிய தற்காப்புக் கலை என்று அறிவிக்கிறது. கராத்தேவின் தோற்றம் வளர்ச்சியை விளக்கிச் சொல்கிறது. அது உருவாக பாடுபட்ட பயிற்சியாளர்கள் பற்றி படத்துடன் விளக்குகிறது. புதிதாக வந்துள்ள புபிஷி முறைகள் பற்றி விளக்குகிறது.
கோபுடா என்ற தற்காப்புக் கலையை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்திய வரலாற்றை விவரிக்கிறது. ஜப்பானிய முறையிலேயே மர்மப் புள்ளிகள் மனித உடலின் படத்துடன் விளக்கப்பட்டுள்ளன. கராத்தேவில் வணங்குதல் என்பது சிறப்பான செயலாகப் போற்றப்பட்டுள்ளது.
கராத்தே பற்றி முழுமையாகத் தெரிவிக்கிறது. இந்த கலை பயில்வோர், ஆசிரியர்களுக்கு பயன் தரும்.
– முனைவர் ரா. நாராயணன்